என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
வங்கி கணக்கில் ரூ.1.50 லட்சம் திருடிய வாலிபர் கைது
வங்கி கணக்கில் ரூ.1.50 லட்சம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்:
திருச்சி மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் பொன்னையன் (வயது56) கூலித்தொழிலாளி. இவர் கரூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு அண்மையில் வந்துள்ளார். அப்போது கரூரில் உள்ள வங்கி ஏ.டி.எம் ஒன்றில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.
ஏ.டி.எம். மையத்தில் இருந்த ஒருவரிடம் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுக்க உதவி கேட்டுள்ளார்.
அவர் உதவுவதுப்போல நடித்து பணம் வரவில்லை எனக்கூறி வேறு ஏ.டி.எம். அட்டையை பொன்னையனிடம் மாற்றிக் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர் பொன்னையன் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.50 லட்சத்தை மர்மநபர் எடுத்துள்ளார்.
இதுகண்டு அதிர்ச்சி யடைந்த பொன்னையன் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள புகையிலைபட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.
Next Story






