என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் அம்ரித் வழங்கினார்
    X
    கலெக்டர் அம்ரித் வழங்கினார்

    ஊட்டியில் அமுதபெருவிழா கண்காட்சி நிறைவு

    போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கேடயம் - கலெக்டர் அம்ரித் வழங்கினார்
    ஊட்டி:

     ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 75- வது சுதந்திர தின விழா சுதந்திர திருநாள் அமுத பெருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில்  மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட  கலெக்டர் அம்ரித்   வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசியதாவது:

    தமிழக முதல்&அமைச்சர்  75-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, "சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடும் பொருட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அனைத்து மாவட்டங்க ளிலும் பல்துறை பணி விளக்க கண்காட்சியினை  நடத்திட தெரிவித்து இருந்தார். அதன்படி, நீலகிரி மாவட்டம் என்.சி.எம்.எஸ் மைதானத்தில்,  செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை   வனத் துறை அமைச்சர்  பொது மக்கள் பார்வையிடுவ தற்காக திறந்து வைத்தார்கள். 

     மேலும், பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து மராத்தான் ஓட்டம், கட்டுரை, பேச்சு, ஓவியப்பே ட்டிகள், கவிதை போ ட்டிகள் நடத்தப் பட்டது. நம்நாட்டு விடு தலைக்காக பாடுபட்டவர்களை தொடர்ந் து நினைவு கூறும் வகையில் இந்த திரு நாள் அமுதப் பெருவிழா நிகழ்ச்சி வாயிலாக சுதந்திர போராட் ட தியாகிகளின் வர லாறு குறித்து பள்ளி, கல் லூரி மாணவ, மாண விகள், இளைஞர்கள், பொது மக் கள் நன்றாக தெரிந்து கொண்டு, உங்களது உறவி னர்கள் நண்பர்கள் ஆகியார்களிடம் சுதந்திர போரா ட்ட தலைவர்கள் மற்றும் தியாகிகளின் சுதந்திர போ ராட்டத்திற்காக மேற் கொண்ட சிறப்பு அம்சங்க ளை எடுத்து அவர்களிடையே தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  

    Next Story
    ×