என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்ற காட்சி. உள்படம் சிறப்பு அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன் பக்தர்களுக்
    X
    பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்ற காட்சி. உள்படம் சிறப்பு அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன் பக்தர்களுக்

    2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

    ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
    ஓசூர், 

     ஒசூர் அருகேயுள்ள பாகலூரில். மிகவும் பழமையான கிராம தேவதை கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவில் திருவிழா,  வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    பாகலூர் பகுதியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த மன்னர் காலத்தில், ஒசூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் வழிபட்டு வந்ததாகவும், பின்னர், பாகலூர் கிராமத்திலேயே வழிபட கோட்டை மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேர்திருவிழாவை நடத்தி வருவதாகவும்,  450 ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெற்று வருவதாக, பெரியவர்கள் கூறுகிறார்கள்.

    பாகலூர் கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம், கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த, 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தாண்டு தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், சுற்றுவட்டார கிராம மக்கள் மிகவும் ஆவலுடன் குவிந்திருந்தனர்.

    விழா நிகழ்ச்சிகள், கடந்த 2-&ந் தேதி தொடங்கியது. பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும்சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து பக்தர்கள் தேரோட்டத்தை வடம்பிடித்து, பக்தி கோஷங்களை முழக்கியவாறு தேரை இழுத்துச் சென்றனர்.

    விழாவில், பாகலூர், பேரிகை, ஓசூர் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்தும், அருகில் உள்ள கர்நாடக எல்லைப்பகுதிகளான மாலூர், மாஸ்தி, சம்பங்கிரி உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தேர் இழுத்து சாமி வழிபாடு நடத்தினார்கள். 

    விழாவையொட்டி, பாகலூரில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு, குடிநீர், பானகம், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தை தொடர்ந்து பல்லக்கு உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், வருகிற 7-&ந்தேதி வரை நடைபெறுகிறது.

    Next Story
    ×