என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்ட 4 பேர் அதிரடி கைது

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை பகுதியில் கஞ்சாசெடிகள் பயிரிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட் டத்தில் மலையோர பகுதி யில் சிலர் கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்த்து விற்பனை செய்து வரு கிறார்கள். இதனால் இளை ஞர்கள் போதைக்கு அடிமை யாகியுள்ளனர். மேலும் மாவட்ட எல்லை வழியாக வும் கஞ்சா பொட்டலங்களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மாவட் டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை மேற் கொண் டனர். 

    இந்த நிலையில் காவேரிப் பட்டணம் போலீஸ் இன்ஸ் பெக்டர் முரளி மற்றும் போலீசார் குட்டப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரிய வந்தது. 

    இது தொடர்பாக  அந்த பகுதியை சேர்ந்த வேலயன் (வயது60),  காளியப்பன் கொட்டாயை சேர்ந்த மாரிமுத்து என்கிற ஜம்பு   ஆகிய 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

    பின்னர் அவர்களிடம் இருந்து சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய் தனர். அங்கு அவர்கள் நிலத்தில் பயிரிட்டுள்ள கஞ்சா செடிகளை போலீசார் அழித் தனர். 

    இதே போல் ராயக் கோட்டை பகுதியில் கஞ்சா செடிகள் வளர்த்து விற்பனை செய்து வருவதாக புகார் வந்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  

    அப்போது தொட்லாம் பட்டி பகுதியில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்து வந்ததாக மணிகண்டன் (28), பெருமாள் (60) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 30 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×