என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊனாம்பாளையத்தில் காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண், தனது வளர்ப்பு
ஊத்தங்கரை அருகே காலிகுடங்களுடன் ரோட்டில் அமர்ந்து பெண்கள் மறியல் போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காலிகுடங்களுடன் பெண்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த ஊனாம்பாளையம் கிரா மத்தில் சுமார் 200 குடும் பத்தினர் வசித்து வரு கின்றனர்.
இந்த பகுதி மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் கோடை காலத்தில் தண் ணீருக்காக அப்பகுதி பெண்கள் மிகவும் சிரமப் பட்டனர். இதுபற்றி கிராம மக்கள், ஊராட்சி நிர்வா கத்திடம் முறையிட்டனர். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக் கையும் எடுக்கப் பட வில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த சுமார் 50&க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் திரண்டு வந்து நேற்று திடீரென சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். மேலும் கட்டைகளை வைத்து சாலையில் தடுப்பை ஏற்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்குமரன், இன்ஸ் பெக்டர் லட்சுமி, சப்& இன்ஸ்பெக்டர்கள் ஜெய காந்தன், குட்டியப்பன் ஆகி யோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மறியல் போராட் டத்தில் ஈடுபட் டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இது பற்றி அதிகாரிகளிடம் தெரிவித்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் , மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கிராம மக்களின் திடீர் மறியல் போராட்டத்தில் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






