என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனு வழங்கிய போது எடுத்தப்படம்
லாரிகளை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல்
மாடுகளை ஏற்றி செல்லும் லாரிகளை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.
ஈரோடு:
மாடுகளை ஏற்றி செல்லும் லாரிகளை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதை யொட்டி மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் வந்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட வருவாய் அலுவல ரிடம் கொடுத்தனர்.
அப்போது தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் நிர் வாகிகள் பலர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:&
ஈரோடு மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் வியாபாரி கள் மாடுகளை ஏற்றி கொண்டு விற்பனைக்காக கொண்டு செல்கிறார்கள். மாடுகளை ஏற்றி செல்லும் வியாபாரிகளின் வாகனங் களை ஒரு சிலர் தடுத்து நிறுத்தி டிரைவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.
மேலும் சில நேரங்களில் டிரைவர்களை அடித்து துன்புறுத்து கின்றனர். இதனால் மாடுகளை ஏற்றிச் செல்ல டிரைவர்கள் முன்வருவ தில்லை. இதனால் மாட்டு வியாபாரி கள் கடும் பாதிப்படைந்து. வருகிறார்கள். மேலும் அவர் களுக்கு பொருளாதார இழப்பும் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாட்டு வியாபாரிகளிடம் பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும் மாடுகளை விற்பனை செய்யும் வியா பாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இதில் மாவட்ட துணை செயலாளர்கள் தேசிங்கு, வெள்ளியங்கிரி உள்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story






