search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பெண் டாக்டர் வீட்டில் 2 கைரேகைகள் சிக்கியது

    பெண் டாக்டர் வீட்டில் 97 பவுன், ரூ.1 1/4 லட்சம் கொள்ளை : 2 கைரேகைகள் சிக்கியது - 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸ் தேடுதல் வேட்டை
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் அருகே மேற்கு லுத்தரன் தெருவை சேர்ந்தவர் அமல குமார். இவரது மனைவி ஜலஜா தேவகுமாரி (வயது 59) டாக்டர். இவர் நாகர்கோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. 

    கணவரும் மகனும் இறந்து விட்டனர். இதனால் வீட்டில் ஜலஜா தேவகுமாரி தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்றார். நேற்று காலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 97 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது. 

    இதுகுறித்து டாக்டர் ஜலஜா தேவகுமாரி நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.டி.எஸ்.பி. நவீன் குமார் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். 

    அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்தனர். கொள்ளை நடந்த வீட்டில் இரண்டு கைரேகைகள் சிக்கியுள்ளது.அந்த கைரேகைகளை போலீசார் பழைய கொள் ளையர்களின் கைரேகை களுடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள்.  கொள்ளை நடந்த வீட்டை சுற்றியுள்ள பகுதி உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை யும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். 

    டாக்டர் ஜலஜா தேவ குமாரி வேலைக்கு செல்வதை நோட்டமிட்டே மர்ம நபர்கள் கைவரிசை ஈடுபட்டுள்ளதால் தெரிந்த நபர்களே இதில் ஈடுபட்டிருக் கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

    இதையடுத்து கொள்ளை யர்களை பிடிக்க இன்ஸ் பெக்டர் ஜெயலட்சுமி தலை மையில் 2 தனிப்படை அமைக் கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் .அந்த பகுதியில் உள்ள சிலரை பிடித்து விசாரணை மேற் கொண்டனர்.

    மேலும் ஜலஜா தேவ குமாரி வீட்டிற்கு சமீபத்தில் யாராவது நபர்கள் வந்து சென்றார்களா என்பது குறித்த விவரங்களையும் கேட்டு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×