என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் பலி
    X
    பெண் பலி

    சேத்தியாத்தோப்பில் ஆம்னி வேன் மோதி பெண் பலி

    சேத்தியாத்தோப்பில் ஆம்னி வேன் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே காமராஜர் தெருவை சேர்ந்த ராஜாமணி. அவரது மனைவி ராணி .(வயது 58) இவர் இன்று காலை சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த ஒரு டீ கடையில் டீ குடித்து விட்டு வீடு திரும்பினார்.

    அப்போது விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி ஒரு ஆம்னி வேன் வந்தது. அந்த வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓரமாக நடந்து சென்ற ராணி மீது மோதியது. இதில் ராணி தூக்கி வீசப்பட்டு அங்குள்ள சாக்கடை வாய்க்காலில் விழுந்தார். இந்த விபத்தில் ராணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து சேத்தியாதோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சேத்தியாதோப்பு போலீஸ் டிஎஸ்பி சுந்தரம் சப்இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து இந்த விபத்துக்கு காரணமான மினி வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×