என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளார் ரூ. 5 லட்சம் நலத்திட்ட உதவி
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளார் ரூ. 5 லட்சம் நலத்திட்ட உதவி
தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் 10,000 மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேல்மருவத்தூர்:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உகாதி தெலுங்கு வருடப்பிறப்பு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதிகாலை 2.30 மணிக்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு மங்கல இசையுடன் சிறப்பு அபிசேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 6.00 மணிக்கு உகாதி பச்சடியுடன் பிரசாதம் வழங்கப்பட்டது.
காலை 10.50 மணிக்கு சித்தர் பீடத்திற்கு வருகை தந்த ஆன்மிககுரு அடிகளாரை ஆந்திரா, தெலுங்கானா மாநில பொறுப்பாளர்கள் பாதபூஜை செய்து வரவேற்றனர்.
அருட்கூடம் சென்ற ஆன்மிககுரு அடிகளார் 7000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு ஆருளாசி வழங்கினார். மக்கள் நலப்பணியாக தையல் இயந்திரங்கள் 52 பேருக்கும், மடிக்கணினி 8 பேருக்கும், மாவு அரைக்கும் எந்திரங்கள் 4 பேருக்கும், விசை மருந்து தெளிப்பான்கள் 15 பேருக்கும், எலக்ட்ரானிக்ஸ் பழுது நீக்கும் கருவிகள் 15 பேருக்கும், கட்டுமானப்பணி கற்களை வெட்டும் கருவிகள் 10 பேருக்கும், அன்னதானம் வழங்க பாத்திரங்கள் 10 பேருக்கும், கல்வி உதவித் தொகை 20 மாணவர்களுக்கும் என ரூ.5 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டன. ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு ரூ.1,00,000 மதிப்புள்ள மருந்துகள் நன் கொடையாக வழங்கப்பட்டன.
10,000 மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 3 மணிக்கு உலக நன்மை வேண்டி ஆந்திரா, தெலுங்கானா மாநில பக்தர்கள் தங்கரதம் இழுத்தனர்.
விழா ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் மேற்பார்வையில் ஆந்திரா, தெலுங்கானா மாநில பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story






