என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குதிரை சவாரி சாகச போட்டிகள் நடந்தபோது எடுத்தப்படம்
    X
    குதிரை சவாரி சாகச போட்டிகள் நடந்தபோது எடுத்தப்படம்

    குன்னூர் வெலிங்டனில் குதிரை சவாரி, சாகச போட்டி- ராணுவ அதிகாரிகள், வீரர்கள் பங்கேற்பு

    நெருப்பு வளையத்திற்குள் குதிரைகள் பாயும் சாகச நிகழ்ச்சி, ஓடும் குதிரையில் அமர்ந்த வீரர், ஈட்டி எறிதல் உள்பட பல்வேறு சாகச போட்டிகள் நடத்தப்பட்டது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெலிங்கடன் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது.

    இந்த பயிற்சி கல்லூரி வளாக பகுதியில் ஜிம்கானா மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் ஆண்டுதோறும் ராணுவ பயிற்சி கல்லூரி மற்றும் மவுண்டன் ஜிம்கானா குழுவினர் சார்பில் குதிரை சவாரி மற்றும் சாகச போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான குதிரை சவாரி மற்றும் சாகச போட்டிகள் நேற்று ஜிம்கானா மைதானத்தில் நடந்தது.

    குதிரைகளுக்கான ஓட்டப்பந்தயம், ஆசர்லே, நான்கு ஜம்பிங், ஷோ ஜம்பிங், பால் அண்ட் பக்கெட் ரேஸ் உள்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர், வீராங்கனைகள் குதிரை சாகச போட்டியில் பங்கேற்றனர்.

    இதுதவிர நெருப்பு வளையத்திற்குள் குதிரைகள் பாயும் சாகச நிகழ்ச்சி, ஓடும் குதிரையில் அமர்ந்த வீரர், ஈட்டி எறிதல் உள்பட பல்வேறு சாகச போட்டிகள் நடத்தப்பட்டது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனுக்குடன் பரிசுகளும் அங்கேயே வழங்கப்பட்டது. பரிசுகளை ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் மோகன் வழங்கினார்.

    இந்த போட்டிகளை ராணுவ உயர் அதிகாரிகள் கண்டு ரசித்தனர்.

    Next Story
    ×