என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்பு படம்
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கணக்கெடுப்பு
By
மாலை மலர்2 April 2022 9:17 AM GMT (Updated: 2 April 2022 9:17 AM GMT)

கன்னியாகுமரியில் இன்று சிறப்பு முகாம் - கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கணக்கெடுப்பு - சுகாதாரத்துறை அதிகாரி தகவல்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் முழு வதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்படுகிறது. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஆய்வுக்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குமரி மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்தது. நாகர்கோவில் மாநகர பகுதியிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. ஆனால் இந்த முகாம்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த விவரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளது தெரியவந்துள்ளது.
எனவே அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று தடுப்பு செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் 18 வயது மேற்பட்டவர்கள் 15 லட்சத்து 11 ஆயிரத்து 200 பேர் உள்ளனர். இதில் 12 லட்சத்து 14 ஆயிரத்து 121 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 80.34 சதவீதம் ஆகும். 2-வது டோஸ் தடுப்பூசியை 9 லட்சத்து 99 ஆயிரத்து 924 பேர் செலுத்தியுள்ளனர். இது 66.17 சதவீதமாகும் .
பூஸ்டர் தடுப்பூசியை 34511 பேர் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் 16348 பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 53 சதவீதம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவில்லை. 15 முதல் 18 வயதிற்கு மேற் பட்டவர்கள் 87400 பேர் உள்ளனர். இதில் 79 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 90.41 சதவீதமாகும்.
64 ஆயிரத்து 489 பேர் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இது 73.79 சதவீதமாகும். 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் 55 ஆயிரத்து 400 பேரில் 37 ஆயிரத்து 499 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. இது 67.69 சதவீதமாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
