என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்பு படம்
குழித்துறையில் தாய் இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை
By
மாலை மலர்2 April 2022 8:13 AM GMT (Updated: 2 April 2022 8:13 AM GMT)

குழித்துறையில் தாய் இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
கன்னியாகுமரி:
குழித்துறையை அடுத்த நட்டாலம், உழுதவிளையை சேர்ந்தவர் விஜயராகவன். (வயது 43). தொழிலாளி. இவருக்கு திருமணமாக வில்லை. இவர் தாயாருடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாயார் உடல் நலக்குறைவால் இறந்து போனார்.
அதன்பின்பு விஜயரா கவன் வீட்டில் தனியாக இருந்தார். இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் சோகத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் விஜயராக வன் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் விஷம் குடித்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி விஜயராகவன் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து மார்த் தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×