என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கலெக்டரிடம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மனு
தடிக்காரன்கோணம் மைதானத்திற்கு வேலி: கலெக்டரிடம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மனு
By
மாலை மலர்2 April 2022 6:57 AM GMT (Updated: 2 April 2022 6:57 AM GMT)

தடிக்காரன்கோணம் மைதானத்திற்கு வேலி: பிரச்சினையை சுமூகமாக பேசி முடிக்க வேண்டும் என கலெக்டரிடம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மனு
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்திடம் கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
புத்தன்துறை மீனவ கிராம மக்கள் தங்கள் பகுதியில் தேங்குகின்ற தண்ணீர் கடலில் கலக்கும் விதமாக தோண்டப்பட்ட வடிகால் ஓடையில் சுமார் 390 மீட்டர் பக்கச்சுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பொது நிதியில் இருந்து 100 மீட்டர் தூரம் கான்கிரீட் மேல்தளம் போடப்பட்டுள்ளது. இந்த மழைநீர் ஓடையில் சுமார் 400 மீட்டர் தூரத்துக்கு கான்கிரீட் மேல்தளம் அமைத்து ஓடையை சீரமைக்க வேண்டும்.
தெள்ளாந்தி ஊராட்சியில் உடையடி கிராமத்தில் இருந்து தென்பாறை கிராமத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டு களாக சீரமைக்கப்படாமல் தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், இந்த சாலை வழியாக செல் லும் விவசாயிகள், பொதுமக் கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, உடையடி முதல் தென்பாறை வரை சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏழு சாட்டுபத்து- சமத்துவபுரம், தோவாளை ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட சகாயநகர் ஊராட்சி சண்முகபுரம் மற்றும் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திக்கிலான்விளை ஆகிய கிராமங்களில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிடம் கட்டுவதற்கு தலா ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அஸ்திவாரம் போடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்த பணிகளை விரைவில் தொடங்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடிக்காரன்கோணத்தில் பொதுமக்கள், இளைஞர்கள் பயன்படுத்தி வந்த மைதானத் தில் வனத்துறையினர் வேலி அமைத்துள்ளனர். இது தொடர்பான பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணும் வகையில் நாகர்கோவில் கோட்டாட்சியர் மற்றும் வனத்துறை அலு வலர்களை கொண்டு கூட்டாக ஆலோசனை நடத்தி தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், மாநகர கழக செயலாளர் சந்துரு, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பரமேஸ்வரன், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பொன்.சுந் தர்நாத், பீமநகரி ஊராட்சி தலைவர் சஜிதா, புத்தன் துறை தூய ஜெபமாலை அன்னை ஆலய பங்கு தந்தை காட்பிரை உள்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
