என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்பு படம்
பொது இடத்தில் ரகளை செய்த 7 பேர் கைது
By
மாலை மலர்2 April 2022 6:00 AM GMT (Updated: 2 April 2022 6:00 AM GMT)

புதுவையில் மது குடித்துவிட்டு பொது இடத்தில் ரகளை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே மடுகரை மெயின் ரோட்டில் 3 வாலிபர்கள் மது குடித்து விட்டு ரகளை செய்வதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் பண்ருட்டி கீழ் கவரபட்டு பகுதியை சேர்ந்த பிரதாப் (வயது 20) ராபின் ராஜா (24) மற்றும் மேல் குமாரமங்கலம் ரகு (23) என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவர் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் மதகடிப்பட்டு சந்திப்பில் மதுகுடித்து விட்டு போதையில் அவ்வழியே செல்லும் பொது மக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்த விழுப்புரம் மகாராஜ புரத்தை சேர்ந்த பழனி (வயது 45) என்பவரை திருபுவனை போலீசார் கைது செய்தனர்.
லிங்காரெட்டி பாளையத்தில் மது கடை அருகே குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட நவமால் மருதூரை சேர்ந்த கார்த்திகேயனை (வயது 45) காட்டேரிக்குப்பம் போலீசாரும் வில்லியனூர் அருகே ஆரியபாளையம் பாலத்தில் நின்று கொண்டு குடிபோதையில் ரகளை செய்த செல்லிப்பட்டு பெரிய காலனியை சேர்ந்த ராம்குமார் (வயது 39) என்பவரை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர்.
மங்கலம் பகுதியில் ஒரு தனியார் கம்பனி அருகே நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்த மேல் திருக்காஞ்சி காமராஜர் நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 23) என்பவரை மங்கலம் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×