search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணியூர் சுங்கச்சாவடி.
    X
    கணியூர் சுங்கச்சாவடி.

    கணியூர் சுங்கச்சாவடியில் ரூ.60 வரை கட்டணம் உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

    கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் சுங்கச்சாவடியில் 10 ரூபாய் முதல் அதிகபட்சமாக 60 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால் உள்ளதால் உள்ளூர் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    கருமத்தம்பட்டி:

    தமிழகத்தில் 6 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு மேல் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இச்சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களிடம், சாலை பயன்பாட்டிற்கான கட்டணம் வசூலிப்பதற்காக, 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 27 சுங்கச் சாவடிகளில், நேற்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் ஒருமுறை மட்டும் செல்ல 100 ரூபாயாக இருந்த சுங்க கட்டணம் தற்போது 110 ரூபாயாகவும், இலகு ரக சரக்கு வாகனங்கள் மற்றும் சிறியரக பஸ்கள் ஒருமுறை மட்டும் சுங்கச்சாவடியை கடக்க 155 ரூபாயாக இருந்த கட்டணம் 170 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஒருமுறை மட்டும் செல்ல 315 ரூபாயாக இருந்த சுங்க கட்டணம் 345 ரூபாயாகவும், மிகப்பெரிய கனரக வாகனங்களுக்கு ஒருமுறை சுங்கச்சாவடியை 625 ரூபாயாக இருந்த கட்டணம் 685 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

    அதேபோல ஒரே நாளில் திரும்பிவரும் பயணத்துக்கான சுங்க கட்டணம், கார், ஜீப் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு 15 ரூபாயும், இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு 20 ரூபாயும், பஸ் மற்றும் கனரக வாகனங்களுக்கு 45 ரூபாயும், மிகப்பெரிய கனரக வாகனங்களுக்கு 340 ரூபாயும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

    இதுகுறித்து உள்ளூர் வாகன ஓட்டிகள் கூறும் போது, சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள், விசைத்தறி, நூற்பாலை போன்ற வணிகம் சார்ந்த மற்றும் வணிகம் சாராத பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகன உரிமையாளர்களுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் சுங்கக் கட்டண உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுங்கக் கட்டண உயர்வால் விலைவாசியும் உயரும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×