என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
வாலிபர் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர்:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த தத்தனூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 27). இவர் கடந்தாண்டு ஏப். 26ந் தேதி தரகம்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி வந்து தாந்தோணிமலை கோயிலில் திருமணம் செய்துக்கொண்டு வேலாயுதம் பாளையம் அருகேயுள்ள கந்தம் பாளையத்தில் உள்ள தோட்டத்தில் சிறுமியுடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.
நிறைமாத கர்ப்பிணியான சிறுமி பிரசவத்திற்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த தவகலறிந்த வேலாயுதம் பாளையம் போலீசார் மாரிமுத்து மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story






