என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேத்துப்பட்டு தாலுகா பூங்குணம் கிராமத்தில் படைவீடு ரேணுகாம்பாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்த  காட்சி.
    X
    சேத்துப்பட்டு தாலுகா பூங்குணம் கிராமத்தில் படைவீடு ரேணுகாம்பாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்த காட்சி.

    பூங்குணம் கிராமத்தில் ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம்

    பூங்குணம் கிராமத்தில் ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள பூங்குணம் கிராமத்தில் படைவீடு ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. 

    இங்கு விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகர் ஆகிய கோவில்கள்புதிதாக கட்டப்பட்டு பஞ்ச வர்ணம் பூசி இதன் கும்பாபிஷேக விழா நடந்தது. 

    கோவிலின் முன்பு யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு 3 யாக குண்டங்கள் அமைத்து 108 கலசம் வைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து பல்வேறு மூலிகைகள் மூலம் கோ பூஜை, தம்பதி பூஜை, நாடி சந்தனம் அங்குரார்ப்பணம் ஆகிய 3 கால பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் கலசத்தை மேளதாளத்துடன் சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி வந்து கோவில் மீது உள்ள விமான கோபுரத்தின் கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினர். 

    பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர். விழாவில்சிறப்பு அழைப்பாளர்களாக வந்தவாசி அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டுரங்கன், 

    பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாவட்ட இலக்கிய தி.மு.க. பொறுப்பாளர் ஏழுமலை மற்றும் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். 

    இதற்கான ஏற்பாடுகளை பூங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேணி கிருஷ்ணன் டாக்டர் விஜயகுமார் மற்றும் விழாக்குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×