என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
போளூரில் குட்கா விற்ற 2 பேர் கைது
போளூரில் குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
போளூர்:
போளூர் பெரிய கரம் செல்லும் சாலையில் பெரியார் தெருவில் உள்ள மளிகை கடையில் போதை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சதீஷ் சங்கர் தனிப்பிரிவு பாஷ்யம் ஆகியோர் தனிப்படை நேற்று கடை மற்றும் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மூட்டை மூட்டையாக குட்கா பான்மசாலா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே ரூ.4 லட்ச மதிப்பில் குட்கா பான்மசாலா பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்பாக மளிகை கடை உரிமையாளர் சர்தார் அலி (37) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து புதிய மசூதி தெருவில் உள்ள ஒரு மளிகைக்கடையில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு மாடி வீட்டில் உள்ள ஒரு அறையில் குடோன் ஆக மாற்றி குட்கா பான்மசாலா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
அங்கிருந்து ஒரு லட்சம் குட்கா பான் மசாலா வகைகள் பறிமுதல் செய்து மளிகை கடை உரிமையாளர் ரகுமான் என்கின்ற பாபு (44) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






