என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
மின்வாரிய ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
மின்வாரிய ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
மின்வாரிய ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு, கருங்கல் பாளையம் காந்திபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் மதனகோபால் (46). திருமணமான இவருக்கு ஒரு மகள் உள்ளார்.
மதனகோபால் சங்ககிரி மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளர் ஆக பணியாற்றி வந்தார். கடந்த 8 மாதமாக தீவிர மது பழக்கத்திற்கு அடிமையானதால் சரிவர வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று மதன கோபால் மாலை குடிபோதையில் வீட்டுக்குள் சென்று கதவை உட்புறமாக தாழிட்டு கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கதவை தட்டி உள்ளனர். ஆனால் பதில் ஏதும் வரவில்லை.
இது குறித்து ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறையினர் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மதனகோபால் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மதன கோ பால் இறந்து விட்ட தாக தெரிவித்த னர்.
இது குறித்து ஈரோடு டவுன் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
Next Story






