என் மலர்
உள்ளூர் செய்திகள்

கீழ்பவானி பிரதான வாய்க்கால்களில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.
கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி பொதுமக்களிடம் கருத்து கேட்ட அமைச்சர் முத்துசாமி
கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி பொதுமக்களிடம் அமைச்சர் முத்துசாமி கருத்து கேட்டறிந்தார்.
ஈரோடு:
கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி பொதுமக்களிடம் அமைச்சர் முத்துசாமி கருத்து கேட்டறிந்தார்.
சென்னிமலை, மொடக்குறிச்சி தாலுக்கா பகுதியில் செல்லும் கீழ்பவானி பிரத £ன கால்வாய் மற்றும் கிளைக்கால்வாய்களில் நடைபெறவுள்ள புனர மைப்பு பணிகள் தொடர்பாக மாவட்டவருவாய் அலுவலர் டாக்டர்.முருகேசன் தலைமையில் அமைச்சர் முத்துசாமி விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
கீழ்பவானி திட்டத்தின்கீழ் சென்னிமலை வட்டத்திற்குட் பட்ட வடமுகம் வெள்ளோடு ஊராட்சியைச் சேர்ந்த செம்மாண்டம் பாளையம், கருக்கன்காட்டுவலசு, ஓலப்பாளையம், தென்முகம் வெள்ளோடு ஊராட்சியைச் சேர்ந்த தேவனாம் பாளையம், மொடக்குறிச்சி வட்டத்திற் குட்பட்ட முகாசி அனுமன் பள்ளி, சென்னியப்பள்ளி, அட்டவணை அனுமன் பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த பொட்டு முத்துப்பாளையம், வெள்ளிவலசு, சங்கராங்காடு, அரச்சலூர் ஆகிய பகுதிகளின் வழியே செல்லும் கீழ்பவானி பிரதான கால்வாய் மற்றும் கிளை கால்வாய்களில் நடைபெறவுள்ள புரனமைப்பு பணிகள் தொடர்பாக விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து கருத்துக்களை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியதலைவர் காயத்திரிஇளங்கோ, கீழ்பவானி வடிநிலகோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவிசெயற் பொறியாளர்கள்அப்புசாமி, சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவிபொறியாளர்கள் உட்பட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story






