என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலையை அடுத்த தமிழ்நாடு வணிகர் சங்கமம் ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
    X
    திருவண்ணாமலையை அடுத்த தமிழ்நாடு வணிகர் சங்கமம் ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    வணிகர்களின் சங்கமம் 3-ம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்- ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

    வணிகர்களின் சங்கமம் 3-ம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருவண்ணாமலை:

     தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு திருவண்ணாமலை மண்டல தலைவர் ஆர்.சிவராமன் தலைமை தாங்கினார். 

    கூட்டத்தில் வருகிற மே மாதம் 5-ந்தேதி சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் 3&ம் ஆண்டு விழாவை எழுச்சி மாநில மாநாடு போல் நடத்துவது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

    3-ம் ஆண்டு தொடக்க விழாவில்  வணிகர்களின் சங்கமம் மண்டல நிர்வாகிகள்,மாவட்ட நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட  அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×