என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாக்குதல்
பரனூர் சுங்கச்சாவடி ஊழியர் மீது வாலிபர் தாக்குதல்
பரனூர் சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் வாலிபர், ஊழியரை தாக்கும் காட்சி பதிவாகி உள்ளது. இதனை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த பரனூரில் சுங்கச்சாவடி உள்ளது. பெரும்பாலும் ‘பாஸ்டேக்’ மூலம் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி இரவு சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி கார் ஒன்று வந்தது. அதில் இருந்து ‘பாஸ்டேக்’ சரிவர செயல்படவில்லை. இதையடுத்து சுங்கச்சாவடியில் இருந்த ஊழியர் வினோத்குமார் காரில் இருந்தவர்களிடம் பணமாக சுங்கக்கட்டணம் கேட்டார். இதில் ஊழியர் வினோத் குமாருக்கும் காரில் இருந்த வாலிபர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த வாலிபர் ஒருவர் வினோத்குமாரின் முகத்தில் சரமாரியாக குத்துவிட்டு தாக்கினார்.
பின்னர் காரில் வந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் வாலிபர், ஊழியர் வினோத்குமாரை தாக்கும் காட்சி பதிவாகி உள்ளது. இதனை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story