என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடியக்கரையில் நாட்டுப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி.
    X
    கோடியக்கரையில் நாட்டுப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி.

    நாட்டுப் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

    கோடியக்கரை சரணாலயத்தில் நாட்டுப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது இந்த சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், குரங்கு, நரி, குதிரை, முயல் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த பசுமை மாறா காட்டில் நாட்டுப் பறவைகளும் அதிக அளவில் காணப்படுகின்றன ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இந்த கோடியக்கரை சரணாலயத்தில் எதிர்புறம் உள்ள பறவைகள் சரணாலயத்தில் உலகெங்கிலுமிருந்து 247 வகையான பறவைகள் வந்து செல்லும்.இதன் கணக்கெடுப்பு பணி ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதேபோல் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள வனவிலங்கு கணக்கெடுப்பு பிப்ரவரி மாதம் முடிவுற்றது.

    மூன்றாவது கட்டமாக வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள நாட்டுப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கி நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் நாட்டு பறவைகளான மைனா, செண்பகம், கௌதாரி, பச்சைக்கிளி, காட்டில் வாழும் காகம், மரங்கொத்தி, சிட்டுக்குருவி, குயில், மயில் போன்ற பல பறவை இனங்கள் இந்த சரணாலயத்தில் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது மேலும் வாய்மேடு பெரியகுத்தகை ஆகிய பகுதிகளில் உள்ள காப்பு காட்டிலும் கோடியக்கரையில் உள்ள 5 அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

    இந்த கணக்கெடுக்கும் பணியில் நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான், ஈரநில நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இரண்டு நாட்கள் கணக்கெடுப்பு நடத்துகின்றனர். இரண்டு நாள் கணக்கெடுப்பு முடிந்தபிறகு பறவையின் எண்ணிக்கை குறித்து விவரம் வெளியிடப்படும் என்று வனச்சரகர் அயூப்கான் தெரிவித்தார்.
    Next Story
    ×