என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
மத்தூர் அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சாணிப் பட்டி நாடார்கொட்டாய் பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (வயது 32), மினி லாரி டிரைவர்.
இந்த நிலையில் இவர் 26ந் தேதி மத்தூரில் இருந்து மினி லாரியில் சாணிப்பட்டி பகுதிக்கு அந்த வழியே அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரும் அவரது மகள் சுஜாதா (32) என்பவரும் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
அப்போது முன்விரோதம் காரணமாக சத்தியராஜ், நாகராஜை தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்கினார். இதை தட்டி கேட்ட சுஜாதாவையும் கல்லால் தாக்கினார். இதில் காயம் ஏற்பட்ட சுஜாதா மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதுகுறித்து சுஜாதா மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மத்தூர் போலீசார் சத்தியராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story






