என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருவலம் அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்டு

    7-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி செய்ததை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த திருவலம் அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள டீக்கராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன் (வயது 55).காட்பாடி அடுத்த திருவலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த பள்ளியில் 7& ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிமியிடம் தொடந்து சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தின்னரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை பெற்றோர் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் இதுதொடர்பாக திருவலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    பள்ளி மாணவிக்கு தொடர்ந்து 15 நாட்கள் ஆசிரியர் முரளிகிருஷ்ணன் தொல்லை கொடுத்துள்ளார். 

    இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். ஆசிரியரின் அத்துமீறலால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

    மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் முரளி கிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இது தொடர்பாக வேலூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆசியர் முரளி கிருஷ்ணனை சஸ்பெண்டு செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×