என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பசு, கன்று குட்டியை அடித்து கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

    தாளவாடி அருகே பசு, கன்று குட்டியை அடித்து கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தாளவாடி:

    தாளவாடி அருகே பசு, கன்று குட்டியை அடித்து கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு  யானை, சிறுத்தை, மான்கள்  உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
    தாளவாடி வனச்சரகத் துக்கு உட்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளி யேறும் சிறுத்தைகள் அடிக்கடி விவசாய தோட்டத் துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டை யாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் தாள வாடி அருகே உள்ள சேஷன் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்தராஜ் (48). விவசாயியான இவர் 6 மாடுகள் வளர்த்து வருகிறா.  வழக்கம் போல் தனது தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். தொடர்ந்து அவர் மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாடுகளை அழைத்து வர சென்றார்.

    அப்போது ஒரு பசு மாடு மற்றும் கன்று குட்டி ஒன்று கழுத்து  பகுதியில் அடிபட்டு இறந்து கிடந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். கால்நடைகளை வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு சிறுத்தை அடித்து கொன்று இருக்கலாம் என எண்ணினார்.
    இது பற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் அந்த பகுதியில் இருந்த கால் தடம் மற்றும் இறந்த மாடுகளை ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தை தாக்கி மாடுகள் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

    கடந்த வாரம் இதே பகுதியில் ஒரு சிறுத்தை காளியப்பன் என்பவர் கரும்பு தோட்டத்தில் புகுந்து பதுங்கி கொண்டது குறி ப்பிடத் தக்கது.

    எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தை நடமாட்டத்தை கண் காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். மேலும் இறந்த மாடுகளுக்கு  இழப்பீடு தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×