என் மலர்
உள்ளூர் செய்திகள்

வசிஸ்டபுரம் கிராமத்தில் அமைச்சர் சிவசங்கர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற போது எடுத்த படம்.
பொது மக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர் சிவசங்கர்
மக்கள் குறைகேட்பு முகாமில் பொது மக்களிடம் இருந்து அமைச்சர் சிவசங்கர் மனுக்களை பெற்று கொண்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வசிஸ்டபுரம், கீழப்பெரம்பலூர், வீரமநல்லூர், வயலப்பாடி, வடக்கலூர், நன்னை கிராமங்களில் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் மக்கள் குறைகேட்பு முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
வசிஷ்டபுரம் கிராமத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் பேசும் போது கூறியதாவது:
தமிழக முதலமைச்சரின் நல்லாட்சி நடைபெற்று வரும் வேளையில், குன்னம் தொகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும், மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின்
கடமை என்ற வகையில் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராம மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உள்ளேன். விரைவில் அனைத்து மனுக்களுக்கும் உரிய தீர்வு காணப்படும் என்றார்.
இதில் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் மதியழகன், வேப்பூர் ஒன்றியகுழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், வசிஷ்டபுரம் சண்முகம், வயலப்பாடி செந்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, ஆண்டாள் குடியரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story