என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டதால் தனியார் பஸ்சில் ஏற அலைமோதிய பயணிகள் கூட்டம்.
    X
    ஈரோட்டில் அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டதால் தனியார் பஸ்சில் ஏற அலைமோதிய பயணிகள் கூட்டம்.

    ஈரோடு மாவட்டத்தில் 10 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்

    பொது வேலை நிறுத்தத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 10 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் பொதுமக்கள்அவதியடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    பொது வேலை நிறுத்தத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 10 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் பொதுமக்கள்அவதியடைந்துள்ளனர்.

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 
    தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இன்றும்,  நாளையும் அகில இந்திய அளவில் இரண்டு நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 

    இந்தப் போராட்டத்திற்கு அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யூ.சி. எல்.பி.எப்., எம்.எல்.எப்., எல்.டி.யு.சி., உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால் பஸ் போக்குவரத்து, வங்கி சேவைகள், தபால் சேவைகள் முடங்கும் நிலை ஏற்பட்டது. 
    பஸ் போக்குவரத்து ஊழியர்கள் இந்த பொது வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சம்பளம் பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 2 நாள் பொது வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது. 

    எச்சரிக்கையும் மீறி பஸ் போக்குவரத்து ஊழியர்கள் பெரும்பாலா னோர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
    இதனால் பொதுமக்கள், வியாபா ரிகள், வெளியூரி லிருந்து வருபவர்கள், பள்ளி&கல்லூரி மாணவ மாணவிகள் கடும் அவதியடைந்தனர்.ஈரோடு மாவட்டத்தில் 11 பணிமனை களில் இருந்து தினமும் 700&க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் இன்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியதால் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பெரும்பாலும் வேலைக்கு வரவில்லை. இதனால் அரசு போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. 

    இருக்கின்ற பணியாட் களை வைத்து ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப் பட்டது. ஆனால் அதேநேரம் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. இதனால் தனியார் பஸ்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று காலை கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அதிகளவில் வந்து இருந்தனர்.
    ஆனால் அரசு பஸ்கள் சொற்ப அளவிலேயே இயக்கப்பட்டதால் மாணவ, மாணவியர் கடும் அவதி அடைந்தனர். குறிப்பாக 10 &ம் வகுப்பு மற்றும் 12&ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது. ஆனால் பஸ்கள் இயங்காததால் அவர் கடும் அவதி அடைந்தனர். ஒரு சில பஸ்கள் மட்டுமே இயங்கியது. ஆனாலும் அந்த பஸ்சில் கூட்டம் அலைமோதியது. பஸ்சில் இடம் பிடிக்க மாணவர்கள் போட்டி போட்டு ஏறினர். இதேபோல் வேலைக்கு செல்லும் பணியாளர்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர். 

    காலை 9 மணி நிலவரப்படி வெறும் 10 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கின. அதேபோல் வெளி மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படா ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். ஒரு மணி நேரம் ஆகியும் பஸ்கள் வராததால் சிலர் பொறுமை இழந்து நடந்து செல்ல தொடங்கினர். டவுன் பஸ்கள் குறிப்பிட்ட அளவே இயங்குவதால் கோபி, அந்தியூர், சத்தியமங்கலம் செல்லும் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். 
    இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் பஸ்கள் இயக்கப்படாததால் கர்நாடக பயணிகள் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்து அவதி அடைந்து வருகின்றனர்.
    இதேபோல் கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி போன்ற பஸ் நிலையங்களிலும் ஒரு சில பஸ்கள் மட்டுமே இயங்கியதால் மக்கள் அவதி அடைந்தனர். ஆனால் அதேநேரம் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கியது. இதனால் ஆட்டோக்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் 10 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பஸ் நிலையங்களில் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர்.
    Next Story
    ×