search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
    X
    வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

    பொது வேலை நிறுத்தம்: தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி- இறக்குமதி பாதிப்பு

    தூத்துக்குடி துறைமுகத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும், இன்று ஒரு நாள் மட்டும் ரூ.15 கோடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் நடைபெற்றுவரும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இன்று காலை 6 மணி முதல் துறைமுகத்தில் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதன் காரணமாக துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வரக்கூடிய லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் துறைமுகத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. தொழிலாளர்கள் துறைமுக பச்சை நுழைவுவாயில் முன்பாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும், இன்று ஒரு நாள் மட்டும் ரூ.15 கோடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். போராட்டத்தையொட்டி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல் கூறும்போது, பொது வேலை நிறுத்தம் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு, துறைமுகங்களை தனியார் மயமாக்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்றார்.

    Next Story
    ×