search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன் உ.பி.மாநில உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன் உ.பி.மாநில உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.

    திருச்சி :

    திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம், உத் தரபிரதேச உழவர் உற்பத் தியாளர் நிறுவனம் இடையே தொழில்நுட்ப பரிமாற் றத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

    திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வாழைக்காய் மாவிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களான நூடுல்ஸ், அடுமனைப் பொருட்கள் மற்றும் வாழை மட்டை மற்றும் நாரிலிருந்து மதிப்புக்கூட்டப்ப பொருட்கள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை உத்தரபிரதேச மாநிலம் இமேலியோரேட் பயோ எனர்ஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்து கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

    இதற்கான நிகழ்ச்சி திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் உமா பேசும் போது,

    உத்தரபிரதேச மாநிலம் பாரம்பரியமாக வாழை உற்பத்தி செய்யும் மாநிலம் இல்லை. இம்மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வாழை சாகுபடியை மேம் படுத்தி தற்போது தமிழ் நாடு, கேரளா போன்ற பாரம்பரியமாக வாழை பயிரிடும் மாநிலங்களுக்கு இணையாக ஏறத்தாழ ஒரு லட்சம் ஹெக் டேர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டு வருகிறது.
     
    இந்த தொழில்நுட்ப பரிமாற்றத்தின்மூலம் வாழைப்பழம் கையாளும் விதத்தை மாற்றி வாழை சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு நுகர்வோரை உந்துவதற்கு தேவையான உத்வேகத்தை அளிக்கும். வாழை நாரை பிரித்தெடுத்து ஆட்டோ மொபைல் உள்ளிட்ட பல் வேறு தொழில் களுக்கு பயன்படுத்துதுல் மேம்படுத் தப்பட்ட பொருளாதாரத் துக்கு வழிவகுக்கும். 

    இதனுடன் விவசாய அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதுடன் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும் என்றார். 

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் ராம் ஆதார் குஷ்வாஹா கூறும் போது :&
    வாழை ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்பம் வாழை விவசாயிகளின் வாழ்வாதர மேம்பாட்டுக் கான நிலையான விரிவான வணிக சூழல் அமைப்பை உருவாக்க உதவிகரமாக இருக்கும் என்றார். 
    Next Story
    ×