என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
வேப்பனப்பள்ளி அருகே தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்- 2 விவசாயிகள் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 விவசாயிகள் பலியா னார்கள்.
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கமடுகு கிராமத்தை சேர்ந்தவர்கள் அம்சகிரி (வயது 45), ராஜன் (30). விவசாயிகள்.
இந்த நிலையில் நேற்று மாலை மாணவரன பள்ளியில் இருந்து தங்கள் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில்சென்று கொண் டிருந்தனர். அப்போது இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற போது சாலையின் தடுப்பு சுவரில் பலமாக மோதியுள்ளனர்.
இதில் அம்சகிரி, ராஜன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதில் அம்சகிரி தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
இதையடுத்து காய மடைந்து உயிருக்கு போராடி கொண் டிருந்த ராஜனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வரு கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற 2 விவசாயிகள், தடுப்பு சுவரில் மோதி பலியான சம்பவம் வேப்பனப் பள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






