என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிடம் லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர் பாஸ்கர்.
நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர்
பிரதாபராமபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகளை கொள்முதல் செய்ய பட்டியல் எழுத்தர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர் பாஸ்கர் விவசாயிகளிடம் மூட்டைக்கு லஞ்ச பணம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் தெற்கு பொய்கை நல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி இளங்கோ நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு அந்த கொள்முதல் நிலையம் சென்றார். அவரிடம் இருந்த 48 மூட்டைகளை கொள்முதல் செய்த பட்டியல் எழுத்தர் பாஸ்கர் உள்ளிட்ட ஊழியர்கள் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 என நிர்ணயம் செய்து மொத்தம் ரூ.1940 லஞ்சமாக கேட்டுள்ளனர்.
மேலும் ஊழியர்களுக்கு டீ வாங்க தனியாக ரூ.100 கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி இளங்கோ இந்த தகவல் மற்றவர்களுக்கும் சென்று சேர முடிவு செய்தார். அதன்படி தனது செல்போனை மறைத்து வீடியோ எடுத்தப்படி பாஸ்கரிடம் அவர் கேட்ட பணம் கொடுத்தார்.
இதையடுத்து வெளியே வந்த இளங்கோ அந்த வீடியோ காட்சிகளை வாட்ஸ்&அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
உடனடியாக லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர் பாஸ்கர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






