என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் படுகாயம்

    பெருந்துறை அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    பெருந்துறை அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் மாவட்டம் தாள வாய்பட்டி பகுதியை சேர்ந் தவர் அருணகிரி (35). லாரி டிரைவர்.
    இவர் கர்நாடகா மாநிலத் தில் இருந்து பாக்கு மட்டை லோடு ஏற்றி கொண்டு பெருந்துறை அருகே உள்ள காஞ்சிகோவில் அடுத்த பூண்டி காட்டு வலசு பகுதியில் உள்ள பாக்குமட்டை தொழிற்சாலைக்கு வந்தார்.

    தொடர்ந்து அவர் அங்கு லாரியை நிறுத்தி விட்டு லாரி மீது ஏறி தார்பாயை அகற்றினார். அப்போது மேலே இருந்த மின்சார கம்பி மீது எதிர் பாராதவிதமாக அவரது கை உரசியது. இதையடுத்து அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு கழுத்து, காலில் பலத்த காயம் அடைந்து அலறினார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத் தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×