என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வீடு, குழந்தைகள் விளையாடும் இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் போட வேண்டாம்- விற்பனையாளர் அறிவுறுத்தல்
வீடு, குழந்தைகள் விளையாடும் இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் போட வேண்டாம் என விற்பனையாளர் அறிவுறுத்தி உள்ளார்.
வேலூர்:
வேலூரை சேர்ந்த எலக்ட்ரிக் பைக் விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:-
மின்சார இருசக்கர வாகனங்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும்.
பேட்டரி அதிக நேரம் சார்ஜ் செய்வதால் பேட்டரி அதிகம் சூடாவதோடு அது வெடிக்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.
ஷார்ட் சர்க்யூட் ஏற்படும்போதும் தீ விபத்து அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிக வெப்பமோ அல்லது குளிர்ச்சியோ இல்லாத இடங்களிலும் மிதமான தட்பவெப்ப சூழலில் உள்ள இடங்களிலும் மின்சார சக்கர வாகனங்களை சாட் செய்யலாம்.
எக்காரணம் கொண்டும் வீடுகளின் உட்பகுதியில் அல்லது காற்றோட்ட வசதி இல்லாத இடங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.
முதலில் இருசக்கர வாகனத்தில் உள்ள சார்ஜிங் பாயிண்டில் மின் இணைப்பு வயரை இணைத்த பின்புதான் மின்சார இணைப்பு கொடுக்க வேண்டும்.
சார்ஜ் செய்யும் முன்பும் சார்ஜ் செய்த பின்பும் 10 முதல் 20 நிமிடங்கள் கழித்து வாகனங்களை இயக்க வேண்டும்.
காற்றோட்டம் உள்ள இடங்களில் மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும். முடிந்தவரை பேட்டரியை கழற்றி சார்ஜ் செய்வது நல்லது.
மின்சார வாகனங்களை பயன்படுத்துவோருக்கு அதனை கையாளும் வழிமுறைகள் குறித்து விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக அறிவுரைகள் வழங்க வேண்டும்.
இரவில் தூங்கச் செல்லும் போது மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதை தவிர்த்து குறிப்பிட்ட கால அளவு நேரத்தில் மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும்.
பாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தினாலும் பேட்டரி வெடிக்க வாய்ப்புகள் இல்லை. ஆனால் உரிய செய்முறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். சந்தையில் மின்சார இருசக்கர வாகனங்கள் குவிந்து கிடக்கின்றன.
தரமான உரிய அங்கீகாரம் பெற்ற இருசக்கர வாகனங்களை தேர்வு செய்து வாங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






