என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெடித்து சிதறிய எலக்ட்ரிக் பைக்.
    X
    வெடித்து சிதறிய எலக்ட்ரிக் பைக்.

    வேலூரில் வாங்கிய 2 நாளில் எலக்ட்ரிக் பைக் வெடித்து சிதறியது எப்படி?

    வேலூரில் வாங்கிய 2 நாளில் எலக்ட்ரிக் பைக் வெடித்து சிதறியது எப்படி?
    வேலூர்:

    வேலூர் சின்ன அல்லா புரத்தை சேர்ந்த துரைவர்மா என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலக்ட்ரிக் பைக் வாங்கி பயன்படுத்தி வந்தார். அந்த பைக்கை வீட்டில் நிறுத்தி வைத்து எலக்ட்ரிக் சார்ஜ் செய்ய மின் இணைப்பு கொடுத்திருந்தார்.

    நேற்று அதிகாலையில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி திடீரென வெடித்து சிதறி தீப்பற்றியது. அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பெட்ரோல் பைக்குக்கும் தீ பரவியது.2 பைக்குகளும் தீப்பிடித்து எரிந்ததால் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டது. இதில் 

    வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த துரைவர்மா மற்றும் அவரது 13 வயது மகள் மோகனா பிரீத்தி மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தனர்.

    துரைவர்மாவின் 10 வயது மகன் அபினேஷ் அருகில் இருந்த உறவினர் வீட்டில் தூங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    தந்தை மகள் உயிரிழப்பிற்கு புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் பைக் தான் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    தீ விபத்து காரணமாக வீட்டின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. 

    மேலும் வீட்டினுள் இருந்த பல லட்சம் மதிப்பிலான வீடியோ சாதன உபகரணங்களும் கணினி சாதனங்களும் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×