என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் நடைபெற்ற பா.ஜ.க.உள்ளாட்சி பிரநிதிகளுக்கான பயிற்சி முகாமில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசிய
பா.ஜ.க. உள்ளாட்சி பிரநிதிகளுக்கு பயிற்சி
பெரம்பலூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. பிரதிநிதிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் பாரதிய ஜனதா கட்சியின் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா உள்ளாட்சி பிரநிதிகளுக்கான 2 பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.
முகாமிற்கு பா.ஜ.க. தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமை வகித்தார். மாநில இணை பொருளாளர் சிவசுப்ரமணியம் வரவேற்றார்.
முகாமில் மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசுகையில், இப்பயிற்சி தனித்துவம் வாய்ந்தது, உள்ளாட்சி அமைப்பு பிரநிதி களின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை விளக்குவது இந்த பயிற்சியின் நோக்கமாகும்.
இப்பயிலரங்கில் பல தலைவர்கள் வழிக்காட்டு நெறிமுறைகளை எடுத்துரைப்பது இதற்கு மேலும் மெருகூட்டும்.
உள்ளாட்சி பிரநிதிகள் தங்களது பகுதிகளுக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற்று செயல்படுத்த வேண்டும். மேலும் தங்களது பகுதிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி பொதுமக்களிடம் நற்பெயரை ஈட்டவேண்டும், மத்திய அரசின் திட்டங்களை தங்களது பகுதி பொதுமக்களிடம் கொண்டு செல்ல அயராது உழைக்கவேண்டும் என தெரிவித்தார்.
தொடந்து நடந்த பயிலரங்கில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொது செயலாளர் சீனிவாசன், மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம், மாநில துணை தலைவர் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., சரஸ்வதி எம்.எல்.ஏ. உட்பட பலர் பேசினர்.
இதில் மாநில துணை தலைவர் துரைசாமி, மாநில மகளிரணி தலைவர் மீனாட்சி நித்யா சுந்தர், மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகள் கலந்துகொண்டனர்.

Next Story