என் மலர்
உள்ளூர் செய்திகள்

முத்துமாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடந்த காட்சி.
முத்துமாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மடுகரை காமராஜர் நகர் முத்துமாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை காமராஜ் நகரில் உள்ள செல்வ விநாயகர், முத்துமாரியம்மன், கோவில் கும்பாபிஷேகம் குமரகுரு நாத அய்யர் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று செல்வவிநாயகர், முத்துமாரி அம்மன் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
துணை சபாநாயகர் ராஜவேலு ஊர் முக்கிய பிரமுகர் தனபூபதி ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் மற்றும் கிராமக்கள் செய்திருந்தனர்.
Next Story






