என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபர் கைது

    ஈரோட்டில் மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மீரான் மொய்தீன் வீதியில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
     
    அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் வந்து கொண்டிருந்தார். அந்த நபரை தடுத்து நிறுத்தி  மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த வெள்ளை மூட்டையை போலீசார் சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர், ஈரோடு மீரான் மொய்தீன் வீதியை சேர்ந்த அசாருதீன் (37) என்பதும், விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றதையும் ஒப்புக் கொண்டார்.

    இதனையடுத்து அசாருதீனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள 40.32 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×