search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழாவை எம்.எல்.ஏ. பிரபாகரன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்த காட்சி.
    X
    விழாவை எம்.எல்.ஏ. பிரபாகரன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்த காட்சி.

    செங்குணத்தில் என்.எஸ்.எஸ். முகாம் தொடக்க விழா

    பெரம்பலூர் செங்குணம் கிராமத்தில் என்.எஸ்.எஸ். முகாம் தொடக்க விழா நடை பெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் செங்குணம் கிராமத்தில்  தொடங்கியது. 

    செங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த தொடக்க விழாவிற்கு ஊராட்சி தலைவர் சந்திரா தலைமை வகித்தார். ஊராட்சி துணை தலைவர் மணிவேல், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    முகாமில் எம்.எல்.ஏ. பிரபாகரன் மரக்கன்றுகளை நட்டு வைத்து, நீடித்த நிலையான வளர்ச்சியுடைய நீர்வழிப்பகுதி மேலாண்மை மற்றும் நிலவள மேம்பாட்டில் இளைஞர்களின் பங்கு என்ற கருப்பொருள் கொண்ட என்.எஸ்.எஸ். சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பேசுகையில், 

    7 நாட்கள் நடைபெறும் முகாமில் தெருவிளக்கு பழுது நீக்கம் செய்தல், கோவில் மற்றும் பள்ளி வளாகங்களில் உழவாரப்பணி மேற்கொள்ளுதல், நீர்வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை சரி செய்தல், விழிப்புணர்வு முகாம், மருத்துவ பரிசோதனை முகாம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என தெரிவித்தார். 

    தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், அரசு தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மை குழு தலைவர் கலியபெருமாள் உட்பட பலர் பேசினர். 

    இதில் ரகு, பயிற்சி அலுவலர் அண்ணாதுரை, அலுவலக மேலாளர் மாலினி, சமூக ஆர்வலர் குமார் அய்யாவு மற்றும் ஐடிஐ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  

    முன்னதாக என்எஸ்எஸ் திட்ட அலுவலர் பிரேம்குமார் வரவேற்றார்.முடிவில் பயிற்சி அலுவலர் மணிவேல் நன்றி கூறினார்.
    Next Story
    ×