என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீட்பு
மஞ்சூரில் 17 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் அதிரடியாக மீட்பு
வருவாய்துறையினரின் நடவடிக்கையின் மூலம் குந்தா தாலுகாவில் சுமார் 35 நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 17 ஏக்கர் ஓடை புறம்போக்கு நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது.
மஞ்சூர்:
தமிழகத்தில் ஓடை புறம்போக்கு பகுதிகளில் உள்ள நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ஓடை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்ரமிப்புகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக அகற்ற வருவாய்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார். இதன்படி குந்தா தாலுகா கீழ்குந்தா, பிக்கட்டி, இத்தலார் வருவாய் கிராமங்களுக்குட்பட்ட முள்ளிகூர்ஆடா, கட்லாடா, பூதியாடா பகுதிகளில் ஓடைபுறம்போக்கு நிலங்களை ஆக்ரமித்து அங்கு தேயிலை, மலைகாய்கறிகள் உள்ளிட்ட பயிரிட்டு விவசாயம் செய்வதை வருவாய் துறையினர் கண்டறிந்தனர்.
இதை தொடர்ந்து குந்தா தாசில்தார் இந்திரா தலைமையில் டெபுடி தாசில்தார் ஜெபசிங், வருவாய் ஆய்வாளர்கள் வேடியப்பன், பரமேஸ்வரி, கிராமநிர்வாக அலுவலர்கள் செந்தில், தினேஷ் உள்ளிட்ட வருவாய்துறையினர் சம்பவ இடங்களில் ஆக்ரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினார்கள்.
ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் தேயிலை செடிகளை அகற்றியும் அப்பகுதிகளில் கட்டப்பட்டிருந்த மாட்டு கொட்டகைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. வருவாய்துறையினரின் நடவடிக்கையின் மூலம் குந்தா தாலுகாவில் சுமார் 35 நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 17 ஏக்கர் ஓடை புறம்போக்கு நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது.

Next Story