என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணியன்.
    X
    மணியன்.

    ஆம்னி வேனை திருடிய வாலிபர் கைது

    பெருந்துறை அருகே ஆம்னி வேனை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே ஆம்னி வேனை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.

    பெருந்துறை குன்னத்தூர் ரோடு பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் சுரேந்தர் சிங் (வயது 34). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். குன்னத்தூர் ரோட்டில் பிளாஸ்டிக் கவர் மற்றும் தார்ப்பாய் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு தனது ஆம்னி வேனை கடையின் முன்பு சாவியுடன் நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது வேனை காணவில்லை. உடனடியாக தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து வேனை தேடினார்.

    இந்த நிலையில் நேற்று காலை ஈரோடு ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் முன்பு ஆம்னிவேன் நின்று கொண்டிரு ப்பதாக சுரேந்தர் சிங்குக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தனது நண்பர்களுடன் சென்று பார்த்தபோது வேனுக்குள் ஒரு வாலிபர் படுத்து தூங்கிக் கொண்டி ருந்தார். அவரை எழுப்பி விசாரித்து பின்னர் பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர்.
     
    போலீசார் விசார ணையில் அவர் மதுரை திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் மணியன் (30) என தெரியவந்தது. மேலும் அவர் வேனை திருடி சென்றதை ஒப்புக்கொண் டார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மணியனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×