என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்
    X
    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்

    ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

    ஈரோடு அருகே கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு அருகே கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    ஈரோடு மாவட்டம் பெரியசேமூர் அருகே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கு தீர்ப்பில் உத்தரவிடப் பட்டுள்ளது.

    அதன்படி, ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அறிவுறுத் தலுக்கிணங்க, பெரியசேமூர் ஆ கிராமம்  அடுக்குப் பாறையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்கால் புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கம்பிவேலி போன்ற ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள்  போலீசார் உதவியோடு ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றினர்.

    Next Story
    ×