என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா பேசிய காட்சி.
பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் விழிப்புணர்வு வேண்டும்- டி.ஐ.ஜி. ஆனி விஜயா பேச்சு
பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என டி.ஐ.ஜி. ஆனி விஜயா பேசினார்.
வேலூர்:
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போக்சோ சட்டம் குறித்து போலீசாருக்கான பயிலரங்கம் இன்று நடந்தது.
வேலூர் சரக டி.ஐ.ஜி.ஆனி விஜயா தலைமை தாங்கினார். போக்சோ சிறப்பு நீதிபதி கலைப்பொன்னி, அரசு வழக்கறிஞர் சந்தியா, தடய மருந்தியல் துறை உதவிப் பேராசிரியை கலைச்செல்வி, ஓய்வு பெற்ற தடயவியல் உதவி இயக்குனர் பாரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டி.ஐ.ஜி ஆனி விஜயா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் ஆங்காங்கே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகிறது.
இதுகுறித்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு போலீசார் அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு வழங்க வேண்டும்.
அப்போதுதான் அவர்கள் தீயவர்களிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வார்கள். இவ்வாறு பேசினார்.
போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார்.
Next Story






