என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து இன்று 4-வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து இன்று 4-வது நாளாக பெட்ரோல்&டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தியாவில் கடந்த 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்தனர். ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
இதன் காரணமாக கடந்த 21-ந் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலை உயரத் தொடங்கியது. கடந்த 21-ந் தேதி ரூ.101.89-க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் படிப்படியாக உயர்ந்து இன்று மேலும் 76 காசு உயர்ந்து ரூ.104.83-க்கு விற்பனையானது. கிட்டத்தட்ட 4 நாட்களில் மட்டும் ரூ.2.94 காசு பெட்ரோல் உயர்ந்துள்ளது.
இதேபோல் ஒரு லிட்டர் டீசல் ரூ.91.93-க்கு விற்பனை யானது. படிப்படியாக உயர்ந்து இன்று மேலும் 70 காசு உயர்ந்து ரூ.94.90 காசுக்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட 4 நாட்களில் மட்டும் ரூ.2.97 காசுகள் உயர்ந்துள்ளன. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள், சிறு வியாபாரிகள் திணறி வருகின்றனர். தொடர்ந்து இவ்வாறு விலை உயர்ந்து வருவதால் மற்ற பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Next Story






