search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி கலெக்டர் முரளிதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    X
    தேனி கலெக்டர் முரளிதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    தேனியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    தேனியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:&
    நடப்பாண்டு சட்டசபை வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் என்ற திட்டத்தின்கீழ் தேனி மாவட்டம் சிறுதானிய சிறப்பு மண்டலமாக  கொண்டு வரப்பட்டு மாவட்டத்தில் சிறுதானிய பயிர் பரப்பை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    மேலும், தேனி மாவட்டத்திற்கு சிப்காட் நிறுவனத்தின் மூலம் பெரிய அளவிலான உணவு பூங்கா அமைத்திட நிதி வழங்கப்பட்டு தரம் உயர்த்தப்பட உள்ளது. தேனி மாவட்டத்தில் பொது தனியார் பங்களிப்புடன் மொத்த காய்கறி வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது.

    தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ பாதிப்பினை கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டு அட்டை விவசாயி களுக்கு வழங்கப்பட இருக்கிறது. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் அறுவடைக்கு பின்  உளுந்து அல்லது பயறு வகைப் பயிர்களை விதைக்க முன்வர வேண்டும்.

    மாநில அளவில் வேளாண்மை புதிய தொழில்நுட்பம், வேளாண் புதிய கருவிகள், இயற்கை விவசாயம் மற்றும் வேளாண் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்கப்படுத்த தமிழக அரசால் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

    இத்திட்டத்தில் பயன்பெற சிறந்து விளங்கும் விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.


    கூட்டத்தில் விவசாயிகள் தேனி மாவட்டத்திற்கென நெல் அறுவடை எந்திரம் வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்கிடவும், டெல்டா மாவட்டங்களுக்கு வழங்கப்படும் குறுவை தொகுப்பு மானியம் தேனி மாவட்ட நெல் விவசா யிகளுக்கு வழங்கிடவும் வலியுறுத் தினர்.

    ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மானியத் தொகையை உயர்த்திடவும், மாவட்டத்தில் விளையும் பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு வழங்கிடவும், கலப்படமற்ற வேப்பம் பிண்ணாக்கு விவசாயிகளுக்கு வழங்கு வதை உறுதிசெய்திடவும் கேட்டுக் கொண்டனர்.

    விவசாயிகள் வைத்த கோரிக்கைகளை உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
    Next Story
    ×