என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகைகடன் தள்ளுபடி.
நகை கடன்கள் தள்ளுபடி
சிவகங்கையில் ரூ.92 கோடி மதிப்பிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் 166 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ. 93கோடி மதிப்பிலான 23ஆயிரத்து 553 நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதற்கான தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள் கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழக முதல்வரால் மொத்த எடை 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை சில தகுதிகளின் அடிப்படையில் தள்ளுபடி செய்ய ஆணையிட்டதன்படி சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கங்கள் ஆகிய கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு உட்பட்டு, கடன் பெற்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் நிறைவு செய்துள்ள 23 ஆயிரத்து 553 கடன்களுக்கு ரூ. 93.05 கோடி மதிப்பிலான கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு, கடன்தாரர்களுக்கு அவர்கள் நகைக்கடன் பெற்ற கூட்டுறவு நிறுவனங்களில் நகைகள் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
மொத்தஎடை 5 பவுனுக்கு உட்பட்டு, கடன்பெற்றுள்ள தகுதியுடைய பயனாளிகள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களை அணகி நகைகள் மற்றும் கடன் தள்ளுபடி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






