என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழக்கு
    X
    வழக்கு

    அரகண்டநல்லூர் அருகே மணல் திருடிய 7 பேர் மீது வழக்கு

    அரகண்டநல்லூர் அருகே மணல் திருடிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்கோவிலூர்:

    அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் கொடுக்கப்பட்டு கிராமத்தில் துரிஞ்சல் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் திருட்டு நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது ஆற்றில் இருந்து மணல் ஏற்றிய நிலையில் நின்று கொண்டிருந்த 7 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக கொடுக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தரணி, விஜயகுமார், செல்வம், சிவக்குமார், சரவணன், வாசுதேவன், ஏழுமலை உள்ளிட்ட 7 பேர் மீது அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×