என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவனை தென்காசி போலீசார் டெல்லியில் இருந்து மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்த போது எடுத்த படம்
    X
    சிறுவனை தென்காசி போலீசார் டெல்லியில் இருந்து மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்த போது எடுத்த படம்

    தென்காசியில் காணாமல் போன சிறுவன் டெல்லியில் மீட்பு- போலீசாருக்கு பாராட்டு

    புவனேஷை பார்த்த அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்ததோடு தங்களது மகனை விரைந்து மீட்டு தங்களிடம் ஒப்படைத்த தென்காசி எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவர் கடந்த 11-ந் தேதி தென்காசி காவல்நிலையத்தில் தனது மகன் புவனேஷ் (வயது 17 ) என்பவரை காணவில்லை என்றும், அவரை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் புகார் மனு கொடுத்தார்.

    மனுவை பெற்றுக் கொண்ட தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்காசி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காணாமல்போன சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில் தென்காசி டி.எஸ்.பி. மணிமாறன், ஏ.எஸ்.பி. கிரீஸ் யாதவ் மற்றும் தென்காசி இன்ஸ்பெக்டர் கே.எஸ்.பாலமுருகன் ஆகியோர் சிறுவனின் இன்ஸ்டாகிராம் வலைத்தள பக்கத்தை பின் தொடர்ந்து கண்காணித்து அந்த சிறுவன் புவனேஷ் இமாச்சலப் பிரதேசம் மணலி சென்றிருப்பதை அறிந்தனர்.

    மேலும் அவனை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் சிறுவன் புவனேஷ் டெல்லியில் இருப்பதை உறுதிசெய்து அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்கள். ஆனாலும் அவரது பெற்றோர்கள் தனது மகனை மீட்டு தங்களிடம் ஒப்படைக்குமாறு போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் டெல்லி விரைந்து சென்று டெல்லி போலீசாரின் உதவியுடன் சிறுவனை கண்டுபிடித்து டெல்லியில் இருந்து சிறுவனை அழைத்து வந்தனர். பின்னர் காவல் அதிகாரிகள் சிறுவனுக்கு அறிவுரைகள் வழங்கி அவரது பெற்றோருடன் சேர்த்து வைத்துள்ளனர்.

    புவனேஷை பார்த்த அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்ததோடு தங்களது மகனை விரைந்து மீட்டு தங்களிடம் ஒப்படைத்த தென்காசி எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    Next Story
    ×