என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
சேத்துப்பட்டு அருகே பைக் மீது கார் மோதி முதியவர் பலி
சேத்துப்பட்டு அருகே பைக் மீது கார் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 60).
இவர் மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதே பகுதியை சேர்ந்த அரங்கநாதன் (65) விவசாயி இவர்கள் இருவரும் நண்பர்கள் நேற்று அருகிலுள்ள கெங்காபுரம்கிராமத்திற்கு சென்று மீண்டும் சமத்துவபுரத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சேத்துப்பட்டில் இருந்து ஆரணி நோக்கி வந்த கார் இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முனுசாமி மற்றும் அரங்கநாதன் இருவரும் படுகாயமடைந்தனர்.
உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக இறந்தார்.
அரங்கநாதனுக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து முனுசாமியின் மகன் ராஜா சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ், வேலு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story






