search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளைப்புலி உயிரிழப்பு
    X
    வெள்ளைப்புலி உயிரிழப்பு

    வண்டலூர் பூங்காவில் வெள்ளைப்புலி உயிரிழப்பு- விலங்குகள் தீவிர கண்காணிப்பு

    வண்டலூர் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு நோய் பாதிப்பு உள்ளதா? என்று ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
    வண்டலூர்:

    வண்டலூர் பூங்காவில் சுமார் 2400 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பூங்காவில் உள்ள 13 வயதுடைய வெள்ளை புலிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதன் கால்களின் இயக்கமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது.

    மருத்துவ குழுவினர் பரிசோதித்தபோது வெள்ளை புலிக்கு அட்டாக்ஸியா நோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து வெள்ளை புலியை தனியாக கூண்டுக்குள் வைத்து கடந்த 2 வாரத்துக்கும் மேலாக சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே உணவு சாப்பிட முடியாமலும், அதன் கால்களின் செயல்பாடுகளும் முழுமையாக முடங்கின.

    இதனால் வெள்ளை புலியின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் வெள்ளைப் புலி பரிதாபமாக இறந்தது.

    அதன் உடலை பரிசோதனை செய்தபோது ஏதேனும் நோய் தாக்குதல் இருந்ததா? என்று கண்டறிய வண்டலூர் பூங்கா நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

    மேலும் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு நோய் பாதிப்பு உள்ளதா? என்று பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×